சேலம்: வாயில் கருப்பு துணி கட்டி ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் நிலுவையில் உள்ள 109 மாத பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி