சேலம் கலெக்டர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேலம் மாவட்ட கிளையின் கூட்டம் கடந்த மாதம் 16-ந் தேதி மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத உறுப்பினர்கள், தங்களுடைய உறுப்பினர்கள் அட்டை மற்றும் பிற ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் பரிசீலனை செய்ய ஏதுவாக அவற்றை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) வருகிற 20-ந் தேதிக்குள் நேரில் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.