சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் நேற்று காலை அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களை சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செல்போனில் ரகசியமாக படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.