சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்னா போராட்டம்

51பார்த்தது
சேலம் உடையப்பாட்டி பகுதியில் தனியார் கிளப்புடன் நவீன பார் அமைக்க எதிர்ப்பு: தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மணக்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தொடர்ந்து ஊர் மக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், உடையாபட்டி மூன்று சந்திப்பில் ஏற்கனவே அனைத்து வசதிகளுடன் கூடிய பார் தமிழக அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த பார் மூலம் பல தரப்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திடீரென ஏற்கனவே உள்ள பாரில் இருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் தனியார் கிளப்புடன் நவீன பார் அமைக்க உள்ளதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்தப் பாருக்கு வழங்கப்பட்ட அனுமதியே ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் பொது மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி