மேச்சேரியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

57பார்த்தது
மேச்சேரியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சேலம் மாவட்டம் மேச்சேரி பேரூராட்சி 13-வது வார்டு தில்லை நகரில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது குடியிருப்பு நிறைந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்படும். இதனால் இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி