தனியார் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

73பார்த்தது
தனியார் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
சேலத்தில் இருந்து திருச்செங்கோடு, ஈரோட்டிற்கு ஆட்டையாம்பட்டி வழியாக 100-க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது. ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மருளையாம்பாளையத்தில் பஸ் நிறுத்தம் இருந்த போதிலும் பெரும்பாலான தனியார் பஸ்கள் அங்கு நிறுத்துவது இல்லை என கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று அப்பகுதி மக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்கள் நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருளையம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திருசெங்கோட்டில் இருந்து சேலம் வந்த 3 தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரவு நேரத்தில் வரும் பஸ்கள் மருளையாம்பாளையத்தில் நிறுத்துவது இல்லை. இங்குள்ள பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வதால் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் மற்றும் பஸ்களை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி