மோட்டார் தொழிலை கார்ப்பரேட் மயமாக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு மோட்டார் பொருளை கார்ப்பரேட் மயமாக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் நான்கு சட்ட தொகுப்புகளை வாபஸ் வாங்க வேண்டும், மோட்டார் தொழிலாளர்களையும் மோட்டார் தொழிலையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் பேரணைக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
சங்கத்தின் மண்டல தலைவர் செம்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு விரைவு போக்குவரத்து தொழிற்சங்க துணைப் பொதுச் செயலாளர் முருகேசன் மண்டல பொருளாளர் சேகர் போக்குவரத்து சங்க நிர்வாகிகள் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.