சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்டத்தின் துணை சார்பில் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், அமைப்பு செயலாளர் சிங்காரம் முன்னிலையில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டித்து சிலர் மறியல் போராட்டம் செய்தனர். இதில் போலீசார் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.