சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால், நெய், தேன், இளநீர், தயிர் உள்பட 16 வகையான வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கரபுரநாதர் சாமி, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த சனி பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சியில் உத்தமசோழபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.