சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே அ. புதூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னம்பல சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளன. இதனையொட்டி 2000-க்கு மேற்பட்ட பக்தர்கள் பூலாம்பட்டி ஆற்றில் புனித நீர் தீர்த்த குடம் எடுத்து அ. புதூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து தாரை, தப்பட்டை, பம்பை முழங்க பசு, எருது, குதிரை உள்ளிட்டவையுடன் பொன்னம்பல கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.