தமிழ்நாட்டிற்கு பா. ஜனதா மூலம் தான் போதைப்பொருட்கள் வருகிறது

60பார்த்தது
தமிழ்நாட்டிற்கு பா. ஜனதா மூலம் தான் போதைப்பொருட்கள் வருகிறது
சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ. ஆர். பி. பாஸ்கர் வரவேற்று பேசினார். மாநகர வர்த்தக பிரிவு தலைவர் எம். டி. சுப்பிரமணியம், பொருளாளர் தாரை ராஜகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி கே. வி. தங்கபாலு, தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கட்சியின் மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: -
காங்கிரஸ் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், செயல்படாத நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கவும் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. கோத்ரா சபர்பதி ரெயில் நிலையத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போது குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்தது யார்? இது பிரதமர் நரேந்திரமோடிக்கு தெரியாதா?
நாடாளுமன்ற தேர்தலில் பா. ஜனதா படுதோல்வி அடையப்போகிறது என்பது நரேந்திரமோடிக்கு தெரியும். மக்களை ஏமாற்ற தற்போது பிரிவினை வாத அரசியல் பேசவில்லை என்று கூறுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும். போதைப்பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி