சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்புதிட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் இதர 16 நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களும் www. tnuwwb. tn. gov. in என்ற தொழிலாளர் துறை இணையதளம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களின், சர்வர் பழுதால் இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்யும் பொருட்டு, தெளிவுரைக்காக மனுதாரர்களுக்கு திருப்பப்பட்ட விண்ணப்பங்கள், கடந்த டிசம்பர் 2-ந்தேதிக்கு முன் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள கேட்பு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக சேலம், ஏற்காடு மெயின்ரோடு கோரிமேடு முகவரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) அலுவலகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா
தொழிலாளர்களுக்கான சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நல வாரியங்களில் இணைய வழியாக விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக, உரிய அசல் ஆவணங்கள்
மற்றும் நல வாரியங்களில்
பதிவு செய்துள்ள கைபேசி
எண்ணுடன் உதவி
மையத்தை அணுகி
பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.