சேலம் மேற்கு சட்டசபை தொகுதியில் குடிநீர் தொட்டி திறப்பு

60பார்த்தது
சேலம் மேற்கு சட்டசபை தொகுதியில் குடிநீர் தொட்டி திறப்பு
சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட 4-வது வார்டு அழகாபுரம் குட்டத்தெரு பகுதியில் இல்லம் தேடி எம். எல். ஏ. நிகழ்ச்சியின்போது ஆழ்துளை கிணறு குடிநீர் தொட்டிகள் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கு 3 இடங்களில் ஆழ்துளை குடிநீர் தொட்டிகள், மின் மோட்டார் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்தன. இந்த குடிநீர் தொட்டிகள் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அருள் எம். எல். ஏ. ஒப்படைத்தார்.
மேலும் அவர் சட்டமன்ற நிதியில் இருந்து 3-வது வார்டில் 2 ஆழ்துளை குடிநீர் தொட்டிகளும், ரெட்டியூர் பகுதியில் உள்ள மயானத்துக்கு சுற்றுச்சுவர் மற்றும் கேட் அமைத்தும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். மேலும் பா. ம. க. நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளையொட்டி 5-வது வார்டில் 5 இடங்களில் கட்சி கொடியேற்று நிகழ்ச்சி அருள் எம். எல். ஏ. தலைமையில் நடந்தது.
சாமிநாயக்கன்பட்டி ஊராட்சி புதுகாலனி பகுதியில் ரூ. 12 லட்சத்தில் புதிய கான்கிரீட் சாலை அமைத்து ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி