ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவு 12 மணியளவில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை வரவேற்றனர். சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் ஹாரன்களை அடித்தவாறு புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.