தனிஷ்க் ஜூவல்லரியில் பழைய நகைகளுக்கு புதிய நகைகள் திட்டம்

65பார்த்தது
தனிஷ்க் ஜூவல்லரியில் பழைய நகைகளுக்கு புதிய நகைகள் திட்டம்
சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூமில் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்க நகைகளை கொடுத்து புதிய நகைகளாக மாற்றும் தங்க பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தனிஷ்க் நிறுவனத்தின் மண்டல வணிக மேலாளர் சந்திரசேகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: -
தங்கத்தின் விலை மிக வேகமாக உயர்ந்து வரும் வேளையில் தனிஷ்க் ஜூவல்லரியில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றிக்கொள்ளும் கோல்ட் எக்சேஞ்ச் பாலிசி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களது தங்கத்திற்கான அதிகபட்ச மதிப்பை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் தனிஷ்க் கழிவேயில்லாத சலுகையை வழங்குகிறது. பழைய தங்க நகைகளை ஹால்மார்க் தரத்துடன் புதிய மார்க்கெட் விலையில் பெற்று கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் தங்கத்திற்கு முழு மதிப்பு கிடைக்கும். இந்தியாவில் உள்ள எந்த நகைக்கடைகளிலும் வாங்கிய தங்க நகைகளாக இருந்தாலும் அவற்றை தனிஷ்க்கில் அளித்து புதிய ஆபரணங்களாக மாற்றிக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் எளிமையான முறையிலும், சவுகரியமாகவும் ஆண்டு முழுவதும் தங்க நகைகளை எக்சேஞ்ச் செய்து கொள்ளும் சேவைகளை தனிஷ்க் வழங்குகிறது. இந்த எக்சேஞ்ச் பாலிசி அனைத்து தனிஷ்க் கடைகளிலும் செல்லுபடியாகும். திருமண நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி