நாமக்கல்: தாய், தந்தை, மகன் தற்கொலை; மருமகள் அதிரடி கைது

85பார்த்தது
நாமக்கல்: தாய், தந்தை, மகன் தற்கொலை;  மருமகள் அதிரடி கைது
நாமக்கல் எருமப்பட்டி யூனியன் அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரன் வயது(25). இவருக்கு 5 மாதத்திற்கு முன் சினேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கோபித்துக்கொண்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. இதை அவமானமாக நினைத்த சுரேந்திரன், தந்தை செல்வராஜ், தாய் பூங்கொடி ஆகியோர் கடந்த 14-ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுரேந்திரன் குடும்பத்தினர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த சினேகாவை எருமப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி