தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் ஜெனரல் துணை இயக்குனர் எஸ். ராகவ் சோனா தொழில்நுட்ப கல்லூரிக்கு வருகை தந்தார். தொடக்க நிகழ்ச்சிக்கு சோனா கல்விக்குழும துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தலைமை தாங்கினார். சோனா கல்லூரியில் உள்ள பயிற்சி மைதானத்தில் 3 பட்டாலியன்களை சேர்ந்த என்.சி.சி. கேடட்களின் பயிற்சி திட்டங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர். க
ல்லூரி வளாகத்துக்குள் இணை என்.சி.சி. அதிகாரிகள், நிரந்தர பயிற்றுவிப்பாளர், ஊழியர்களால் நடத்தப்படும் அமர்வுகளை துணை இயக்குனர் ராகவ் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகளை எஸ்.ஆர்.ஆர். செந்தில்குமார் பாராட்டினார். சோனா தொழில்நுட்ப கல்லூரியின் லெப்டினன்ட் ஆர். சக்திவேல் வரவேற்பு உரையாற்றினார். சிறப்பாக செயல்பட்ட கேடட்களுக்கு பாராட்டு சிறப்பு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சோனா தொழில்நுட்ப கல்லூரி லெப்டினன்ட் அனிதா நன்றி கூறினார். இதில் தமிழ்நாடு 11-வது சிக்னல் கம்பெனி என்.சி.சி., 12-வது பட்டாலியன் என்.சி.சி., தமிழ்நாடு 5-வது ஏர் என்.சி.சி. பட்டாலியன்களை சேர்ந்த கேடட்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.