தஞ்சாவூர் அருயுள்ள திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் லித்திய ஜெயபெரேரா (27).
இவரது கணவர் அல்பன் அமல்ராஜ். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 28ம்தேதி லித்திய ஜெயபெரேவின் சொந்த ஊரில் நடக்கும் திருவிழாவில் பங்கேற்க தஞ்சாவூருக்கு ஓசூரில் இருந்து அரசு
பஸ்சில் வந்துள்ளார்.
அப்போது 2 பேக்குடன் பஸ்சில் ஏறிய இவர், சேலம் வந்து பார்க்கும்போது பேக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பேக்கில் 25 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பள்ளி, கல்லூரி ஆவணங்கள் ஆகியவற்றை வைத்திருந்துள்ளார்.
அந்த பேக்கை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து அவர் சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அப்பு காரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பஸ்சில் வந்த பெண்ணிடம் நகை பேக்கை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.