மும்பை- ஈரோடு சிறப்பு ரெயில் சேவை காலம் நீடிப்பு

281பார்த்தது
மும்பை- ஈரோடு சிறப்பு ரெயில் சேவை காலம் நீடிப்பு
மும்பை நான்டேட்டில் இருந்து ஈரோட்டுக்கும், ஈரோட்டில் இருந்து நான்டேட்டிற்கும் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக் கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் சேவை காலம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான் டேட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2. 40 மணிக்கு புறப்படும் நான்டேட் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில் (07189) சேவை வருகிற 13-ந் தேதி முதல் நவம்பர் 24-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுமார்க் கத்தில் ஈரோட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5. 15 மணிக்கு புறப்படும் ஈரோடு - நான்டேட் வாராந்திர சிறப்பு ரெயில் (07190) சேவை காலம் வருகிற 15-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி