சேலம் மாநகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ. , மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது சுப்பராயன் லே-அவுட் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்தை ஆய்வு நடத்தினர். அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். பின்னர் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினர். இந்த நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, வார்டு கவுன்சிலர் சாந்தமூர்த்தி, வார்டு தி. மு. க. செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 15, 16-வது வார்டு பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.