சேலம்: விபத்தில் சிக்கிய பெண்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் உதவி

59பார்த்தது
சேலம்: விபத்தில் சிக்கிய பெண்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் உதவி
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று (மார்ச் 12) ஆத்தூரில் நடந்த விழாவுக்கு சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். அயோத்தியாப்பட்டணம் பகுதியில் சென்றபோது ஸ்கூட்டரில் சென்ற 2 பெண்கள் விபத்தில் சிக்கியிருந்தனர். 

இதைக்கண்ட அமைச்சர் ராஜேந்திரன் உடனே காரை விட்டு இறங்கி அந்த 2 பெண்களையும் சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். சம்பவ இடத்துக்கு கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் அதிகாரிகள் வந்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு 2 பெண்களையும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவி செய்தார். அந்த 2 பெண்களும் தற்போது நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி