மின் கட்டணம் விவகாரத்தில் வாலிபரை தாக்கியவர் கைது

59பார்த்தது
மின் கட்டணம் விவகாரத்தில் வாலிபரை தாக்கியவர் கைது
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 37). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாககுமார் (48). இவர்களது 2 வீடுகளுக்கும் ஒரே மின் கம்பியில் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளன. கடந்த சில மாதங்களாக நாககுமாருக்கு அதிகம் மின் கட்டணம் வந்து உள்ளது. இதில் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாககுமார், பிரபுவை தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்தபுகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாககுமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி