சேலத்தில் தனியார் பஸ்களுக்கு அதிரடி அபராதம்!

11457பார்த்தது
சேலத்தில் தனியார் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்துகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். சேலத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய ஹேர் ஹாரன்களை பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்ததை அடுத்து, இன்று சேலம் மாவட்டத்தில் மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் ஆய்வு செய்தனர். இதன்படி சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த அனைத்து தனியார் பேருந்துகளையும் ஆய்வு செய்தனர். அப்போது 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை ஆய்வு மேற்கண்டத்தில் 10க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஹேர் ஹாரங்கள் பயன்படுத்துப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளில் இருந்து ஹேர் ஹாரன்களை பறிமுதல் செய்ததோடு, அனைத்து பேருந்துகளுக்கும் தலா 10, 000 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த சோதனை என்று நாள் முழுவதும் நடைபெற உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி