சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலக வளாகத்தில் நாய்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மாதம் (ஜூலை) 333 வீட்டு நாய்கள் 596 தெரு நாய்கள் என மொத்தம் 929 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுபோன்று சூரமங்லம் மண்டலம் ரெட்டிப்பட்டி மற்றும் சூரமங்கலம் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 216 தெருநாய்கள், 127 வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன. அஸ்தம்பட்டி மண்டலத்தில் 116 தெருநாய்கள், 61 வீட்டு நாய்களுக்கும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 158 தெருநாய்கள், 62 வீட்டு நாய்களுக்கும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 106 தெருநாய்கள், 83 வீட்டு நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கூறினார். முகாமில் சூரமங்கலம் உதவி ஆணையாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.