சேலம்: கல்விக்கடன் தேவைப்படும் திருநங்கைகளுக்கு உடனடியாக கடனுதவிகள்

70பார்த்தது
சேலம்: கல்விக்கடன் தேவைப்படும் திருநங்கைகளுக்கு உடனடியாக கடனுதவிகள்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். இதில் கேக் வெட்டிய திருநங்கைகள் கலெக்டருக்கு ஊட்டினர். விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: -
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற வழிவகை செய்யப்பட்டது. கல்விக்கடன் தேவைப்படும் திருநங்கைகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக திருநங்கைகள் சுயதொழில் தொடங்குவதற்கென மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவிகள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் 20 திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிருந்தா தேவி வழங்கினார்.

தொடர்புடைய செய்தி