சேலத்தில் நடந்து சென்ற பெண்ணை எட்டி உதைத்த குதிரை

4பார்த்தது
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலை இறந்தவர் ஒருவரின் இறுதிஊர்வலம் நடந்தது. அப்போது ஊர்வலத்தின்போது சிலர் சாலையில் பட்டாசுகளை வெடித்து ஆரவாரத்துடன் சுடுகாட்டிற்கு இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர். அப்போது பட்டாசு சத்தத்தை கேட்டவுடன் அங்கு கட்டி இருந்த குதிரை ஒன்று மிரண்டு கயிற்றை அறுத்துக்கொண்டு தறிகெட்டு ஓடியது.
அப்போது, அந்த குதிரை சாலையில் நடந்து சென்ற சரோஜா என்ற பெண்ணை காலால் சரமாரியாக எட்டி உதைத்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக சரோஜாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி