சேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை

834பார்த்தது
சேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசாக மழை தூறியது. இதையடுத்து இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரமே நீடித்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த திடீர் மழையினால் வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர். மேலும் மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் நிலவியது.

தொடர்புடைய செய்தி