சேலத்தில் கொட்டி தீர்த்த கனமழை

641பார்த்தது
சேலம் மாவட்டத்தில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஏற்காடு, ஆத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் மழையினால் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சேலத்தில் நேற்று காலை வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது. இதனால் வெயிலின் அளவு 96 டிகிரியாக பதிவாகி இருந்தது. சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை ¾ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்த மழையினால் 4 ரோடு, சங்கர் நகர், புதிய பஸ் நிலையம், அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் ுளம்போல் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையினால் வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டு சென்றனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் வீட்டுக்கு செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர். சில மாணவ, மாணவிகள் மழையில் நனைந்து கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது. இந்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழை காரணமாக இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு வரை கொட்டி தீர்த்த இந்த மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்புடைய செய்தி