அரசு கலைகல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது

58பார்த்தது
அரசு கலைகல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது
சேலம் அரசு கலை கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: -
சேலம் அரசு கலை கல்லூரியில் 2024-25-ம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அதாவது, நாளை அறிவியல் பாடப்பிரிவுக்கும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கலை வணிகவியல் மற்றும் மொழி பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்விற்கு அழைக்கப்படும் மாணவர்கள் எஸ். எஸ். எல். சி. , பிளஸ்-1, பிளஸ்-2 சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் 3 நகல்களுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் காலை 9. 30 மணிக்குள் கல்லூரி வளாகத்திற்குள் வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி