சேலத்தில் தீக்காயம் அடைந்த சிறுமி பலி

70பார்த்தது
சேலத்தில் தீக்காயம் அடைந்த சிறுமி பலி
சேலம் இரும்பாலை சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகள் ஜனனி (வயது 15), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று வீட்டில் சாமி கும்பிடுவதற்காக விளக்கு ஏற்றிய போது திடீரென ஜனனியின் ஆடையில் தீப்பற்றியது. 

இதில் காயம் அடைந்த சிறுமியை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஜனனி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி