ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரு வதை தடுக்கும் வகையில் சேலம் ரெயில்வே போலீசார் நேற்று தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர். இதற்காக போலீசார் காட்பாடியில் ரெயிலில் ஏறி சோதனை நடத்தினர்.
ரெயில் கருப்பூர் அருகே வந்தபோது எஸ்-1 பெட்டியில் ஒரு கை பை கிடந்தது. இதையடுத்து போலீசார் அருகில் இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி நடூர் துறிஞ்சிப்பட்டி கிராமத் தைச் சேர்ந்த அப்துல் முகீத் (வயது 24) என்பது தெரியவந் தது. போலீசார் அவரிடம் சோதனை நடத்தினர். அவர் சப்- இன்ஸ்பெக்டருக்கான அடையாள அட்டை போலியாக வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்ததுடன் 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.