உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி பெண்களுக்கு இலவச மரக்கன்றுகள்

72பார்த்தது
உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி பெண்களுக்கு இலவச மரக்கன்றுகள்
பொன்னுலகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் சேலம் ஒய். எம். சி. ஏ. ஹாலில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சேலம் மண்டல செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். நிர்வாகி கதிரவன் அனைவரையும் வரவேற்றார். இதில், இயற்கை ஆர்வலர் தங்கதுரை, சமூக ஆர்வலர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினர். பின்னர் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு இலவசமாக பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கினர்.
மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொன்னுலகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி