சேலத்தில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

58பார்த்தது
சேலத்தில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் நேற்று நூடுல்ஸ் மொத்த விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தினர். இது குறித்து அலுவலர் கதிரவனிடம் கேட்ட போது, ‘சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நூடுல்ஸ் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் காலாவதியான நூடுல்ஸ் கண்டறியப்படவில்லை. இருப்பினும் சந்தேகப்படும்படியாக இருந்த 23 நூடுல்ஸ் மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆய்வின் முடிவில் காலாவதியான உணவு பொருட்கள் என்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி