சேலம் அம்மாபேட்டை பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் தவுலத். இவரது மனைவி சாஜாத். இவரது சகோதரி புதிதாக வீடு கட்டி புதுமனைப் புகுவிழா நடத்தினார். இதற்காக 4ம் தேதி சாஜாத் தனது வீட்டைப் பூட்டிவிட்டு சகோதரி வீட்டிற்குச் சென்றிருந்தார்.
தொடர்ந்து கடந்த வாரம் வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ஐந்து பொன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அதனால் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் சாஜாத் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் பீரோவில் வைத்திருந்த நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.