சேலம் மாவட்டம் ஆத்தூர் கடை வீதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் இன்று ஆத்தூர் தீயணைப்பு துறை நிறை அலுவலர் அசோக் குமார் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு மாணவர்கள் வெளியே வரவேண்டும், அவர்கள் எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று செய்முறை பயிற்சி காண்பிக்கப்பட்டது.