தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. பி. அன்பழகன் ஏற்பாட்டில், அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், தருமபுரி மாவட்ட மகளிரணி செயலாளர் வள்ளி, மற்றும் தருமபுரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பாஜக மற்றும் பாமக கட்சியினர் என 100க்கும் மேற்பட்டோர் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
புதியதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இதேபோல், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எம். இரத்தினசாமி ஏற்பாட்டில் திமுகவை சேர்ந்த பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் ஜோதி மனோகரன், கிளை செயலாளர் ரமேஷ், அமமுகவை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் இளவரசன், கார்த்திகேயன், தொண்டரணி நிர்வாகி குமார், அமமுக தொண்டரணி நிர்வாகி முத்து கிருஷ்ணன், இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த மாணவ ரணி செயலாளர் கிருஷ்ணன் ஆகிய 7 நிர்வாகிகள் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
புதியதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.