சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் 2000 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வாக்களித்தனர்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சேலம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடத்துவது வழக்கம் இதுபோல இன்று வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடந்தது இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இன்று காலை 10 மணி அளவில் வாக்குப்பதிவு துவங்கியது தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் உள்ளிட்ட 17 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது இதில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போட்டியிட்டு இருந்தனர் தேர்தலையொட்டி காலை முதலே வழக்கறிஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர், மேலும் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் வழக்கறிஞருமான ராஜேந்திரன் ஆகியோரும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்து இன்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு
முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நடைபெறும் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.