புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த சொகுசு காருடன் டிரைவர் கைது

79பார்த்தது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு ஒருவர் காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக சேலம் மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடத்தல் காரரை பிடித்து கைது செய்யும்படி போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை கருப்பூர் சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் காரை பின்தொடர்ந்து வந்தனர்.
ஆனாலும் கார் மின்னல் வேகத்தில் மேம்பாலத்தில் பறக்க தொடங்கியது. குரங்குச்சாவடி அருகே வந்த போது பாலத்தை விட்டு 5 ரோடு வழியாக சொகுசு கார் திரும்பியது.
இதைப்பார்த்த போலீசார், போக்குவரத்து போலீசாரை தொடர்பு கொண்டு 4 ரோடு பகுதியில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்துமாறு கூறினர். இதையடுத்து அந்த வழியாக வந்த கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது சொகுசு கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி