தாரமங்கலம்: வேலைக்கு சரியாக வராத மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்

78பார்த்தது
தாரமங்கலம்: வேலைக்கு சரியாக வராத மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கூடுதல் மேற்பார்வையாளராக கஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளராக உள்ளார். அவர் வேலைக்கு சரியாக வருவதில்லை எனவும், நிர்வாகத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அவர் சரியான முறையில் பதில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கூடுதல் மேற்பார்வையாளர் கஜேந்திரனை பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனஞ்செயன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘வேலைக்கு சரியாக வருவது இல்லை. மேலும் நிர்வாகத்திற்கு எதிராகவும் கஜேந்திரன் செயல்பட்டு வந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டும் அவர் பதில் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.

தொடர்புடைய செய்தி