பத்து ரூபாய் இயக்கம், மாற்றுத்திறனாளி விடுதலை முன்னணி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் அமைப்பு ஆகியவை இணைந்து சேலம் கோட்டை மைதானம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இதற்கு பத்து ரூபாய் இயக்க விவசாய அணி செயலாளர் அழகு தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி விடுதலை முன்னணி மாநில பொதுச்செயலாளர் மோகன்ஜி வரவேற்றுப்பேசினார். மாநில செயலாளர் சதீஷ்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமைகள், ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காத துறை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற அரசு ஊழியருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.