சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனக்கூறி பா. ஜனதா அரசை கண்டித்து சேலம் கோட்டை பகுதியில் நேற்று மாலை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ஏ. ஆர். பி. பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மாநகர வர்த்தக பிரிவு தலைவர் சுப்ரமணியம், மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு மத்திய பா. ஜனதா அரசுக்கு நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் பதவி விலகக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.