மாநகராட்சி ரூ. 8 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி மேயர் ஆய்வு

60பார்த்தது
மாநகராட்சி ரூ. 8 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி மேயர் ஆய்வு
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 17-வது வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் உங்கள் பகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் முதல் புதிய பஸ் நிலையம் வரை சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 1½ கிலோமீட்டர் நீளத்திற்கும், 3 மீட்டர் அகலத்திற்கும் ரோட்டின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டு வரும் இந்த கால்வாய் பணிகளை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வருகிற வடகிழக்கு பருவமழை தொடக்கத்திற்கு முன்னதாக இப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து பிருந்தாவன் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஆய்வு செய்தார். இந்த பணியை விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் வாசுகுமார், உதவி பொறியாளர் சுபாஷ்சுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி