சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா

83பார்த்தது
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 27-வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நடந்தது. கல்லூரியின் துணை முதல்வர் சாந்தகுமாரி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விஸ்வநாதன் கலந்து கொண்டார். கல்லூரி தலைவர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, 'இளம் வக்கீல்கள் தொழிலில் தங்களது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். 

அதற்கு தினந்தோறும் வரும் நடப்பு வழக்குகளை பற்றியும், அதன் தன்மையை பற்றியும் அவர்கள் அறிந்துகொண்டே இருக்க வேண்டும். வக்கீல்கள் அவர்களின் மொழித்திறனையும், பன்மொழித்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்று பேசினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினரான நீதிபதி விஸ்வநாதன், 390 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது, 'மற்ற துறைகளிலும் வக்கீல்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 

அதற்கு செயற்கை நுண்ணறிவு எனப்படும் மெய்நிகர் சட்டங்களை மாணவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதற்காக மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்' என்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா, துறை பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரியின் டீன் கீதா நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி