விவேகானந்தா கல்லூரியில் 656 மாணவிகளுக்கு பட்டம்

160பார்த்தது
விவேகானந்தா கல்லூரியில் 656 மாணவிகளுக்கு பட்டம்
சங்ககிரி விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி யில் பட்டமளிப்பு விழா நடந்தது. விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் ஆஸ்பத்திரிகளின் தாளாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி, இணை நிர்வாக இயக்கு னர் அர்த்தநாரிஸ்வரன். இணை செயலாளர் ஸ்ரீராகநிதி. துணைத்தலைவர் கிருபாநிதி, இயக்குனர் நிவேதனா, செயல் இயக்குனர் குப்புசாமி தலைமை செயல் அதிகாரிகள் சொக்க லிங்கம், வரதராஜீ, திறன் மேம்பாட்டுத்துறை இயக்குனர் குமா ரவேல், திருச்செங்கோடு வளாக முதல்வர்கள் பேபி ஷகிலா, ராஜேந்திரன், ஐ. கியூ. ஏ. சி. இயக்குனர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழக துணைவேந் தர் ஆர். ஜெகநாதன் கலந்து கொண்டு 656 இளங்கலை, முது கலை மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி சென்றால் ஆயுள் அதிகரிக் கும். மூச்சுப்பயிற்சி இருந்தால் எமனையும் எட்டி உதைக்க லாம். யோகா, தியானம் மூலம் உடல்நலத்தை பாதுகாக்க முடியும். மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்றார். விழாவில் இளங்கலை பயோகெமிஸ்ட்ரி மாணவி ரம்யா, பெரி யார் பல்கலைக்கழக அளவில் முதல் ரேங்க் பெற்று தங்கப்ப தக்கம் பெற்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி