சேலம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 35). இவருடைய கணவர் செல்வகுமார். அதே பகுதியில் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிறுவனம் வைத்து நடத்தினார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார்.
இதையடுத்து அந்த நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த கணினி மற்றும் காசோலைகள் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.