தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து
பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு
போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான
கருவிகளை வாங்கி வாடகைக்கு விடுவது உட்பட பல்வேறு திட்டங்களை கைவிட வேண்டும். நகர கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை விரைவில் பெற்று ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.
சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப
வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும்
மேற்பட்டோர் பங்கேற்றனர்.