குங்பூ போட்டியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

527பார்த்தது
குங்பூ போட்டியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
சேலம் பிரபாத் ராஜசபரி தியேட்டரில் லீ ஷாவ்லீன் குங்பூ அனைத்து தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் குங்பூ பெல்ட் தேர்வு தாதகாப்பட்டி வழி வாய்க்கால் காளியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் சிகான் பழனிவேல், செயலாளர் கிராண்ட் மாஸ்டர் சீஜோ ரவிகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். 

இதில் மேச்சேரி, காமனேரி, காமிநாயகன்பட்டி, பாலகுட்டப்பட்டி, பிரபாத் ஆகிய பகுதிகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு குங்பூ மாஸ்டர்ஸ் பூவரசன், பூவரசு, நவீன் மணிகண்டன், தக்‌ஷித் ஆகியோர் பெல்ட், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர். இதில் ஊர் பொதுமக்கள், பெற்றோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி