பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் பொருட்கள் திருடிய 2 பேர் கைது

74பார்த்தது
பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் பொருட்கள் திருடிய 2 பேர் கைது
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலைராணி (வயது 64). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு கீரிப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாரத்ராஜ் (26), ஹரிகரன் (19) ஆகிய 2 பேரை கைது சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி