முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சேலம் மத்திய மாவட்ட தி. மு. க. மருத்துவர் அணி சார்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந் திரன் எம். எல். ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். சேலம் மத்திய மாவட் டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த டாக்டர்கள். தி. மு. க. வினர் என 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர். பின்னர் அவர்களை அரசு ஆஸ்பத்திரி டீன் மணி, கண்காணிப்பாளர் தனபால் மற்றும் ரத்தவங்கி ஊழியர் கள் ஆகியோர் பாராட்டினர். தி. மு. க. மத்திய மாவட்ட மருத்து வர் அணி அமைப்பாளர் அருள், தலைவர் பாலமுருகன், துணை அமைப்பாளர்கள் பிரேம்நாத், பாலாஜி, இளம் தமி ழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.