அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தனர். பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த மரவனேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
சிலையின் முன்பகுதிக்கு வந்தபோது மேலே சிலைக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய முன்னணி இயக்கத்தை சேர்ந்த சிலர், பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக கோஷங்கனை எழுப்பினர். இதனால் கீழே நின்று கொண்டிருந்த பாஜகவினர் அவர்களை அடிக்க பாய்ந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த அஸ்தம்பட்டி உதவி ஆணையர் அஸ்வினி தலைமையிலான போலீஸார், பாஜகவினரை படிக்கட்டு பகுதிக்கு ஏறவிடாமல் தடுத்தனர். மேலும் கோஷங்கள் எழுப்பிய தமிழ தேசிய முன்னணியினரை தாக்க முயற்சித்தனர் இதனால் சிலையின் பின்பக்கம் வழியாக அவர்களை அனுப்பினர்.
அப்போது, பாஜகவை சேர்ந்த ஒருவர் கொடி கட்டியிருந்த பைப்பை தூக்கி அடிக்க பாய்ந்தார். அது போலீஸ் உதவி ஆணையர் அஸ்வினி மீது அடி விழுந்தது.
உடனடியாக பாஜக தலைவர் சசிகுமார். கட்சியினரை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பாஜகவினர் கீழே இறங்கி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.